பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்!

0
80

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அறிவித்த பிறகுதான் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

சென்ற டிசம்பர் மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பள்ளிகள் ஆரம்பமானது. இதனை அடுத்து கடந்த 8ஆம் தேதி 9 மற்றும் பதினோராம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஆரம்பமானது.தொற்று பரவலை மனதில் வைத்து மாணவர்களுக்கான பாடத்திட்டம் பள்ளிக்கல்வித்துறையால் குறைக்கப்பட்டிருக்கிறது.

பொதுத்தேர்வின்போது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னரே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் 6 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கும் விரைவாக பள்ளிகள் திறக்கப் பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஆறு மற்றும் ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்த பிறகுதான் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.