அஜித்துடன் மோதும் நடிகர் கார்த்தி! வெளியானது அறிவிப்பு

0
223

அஜித்துடன் மோதும் நடிகர் கார்த்தி! வெளியானது அறிவிப்பு

இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார்.

மேலும் இவர் பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகுகிறது. அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள பிரமம்மாண்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டெம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகுகிறது.

அடுத்ததாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் படமான ‘சர்தார்’, இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சர்தார் படத்தில் நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்தது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே61 படம் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அஜித் படத்துடன் கார்த்தியின் படம் மோத போகிறது. விஜய்யை தொடர்ந்து அஜித்துடன் மோதும் கார்த்தியின் திரைப்படங்கள்.

இதனை தொடர்ந்து ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் வெளியான அதே தேதியில், கார்த்தி நடித்த கைதி படமும் வெளியாகி இருந்தது. கைதி படத்திற்கு அதிகளவு வரவேற்பு கிடைத்திருந்தது குறிப்பிட்டதக்கது.

Previous articleநாட்டில் ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு 2500 ஐ கடந்தது!
Next articleராமேஸ்வரம் அருகே கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்! வாலிபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை!