முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்!

0
186

முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்!

இந்தியன் 2 படத்தில் நடிகர் கார்த்திக் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசனின் மெஹா ஹிட் திரைப்படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து மற்றும் தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இருந்து பல கலைஞர்கள் தங்களின் வேறு பணிகளுக்காக வெளியேறினர். மேலும் சில கலைஞர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் இயற்கை எய்தியுள்ளனர். நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் சமீபத்தில் மறைந்தது படக்குழுவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் படத்தில் நெடுமுடி வேணு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது நடிகர் கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் கார்த்திக், கமல்ஹாசனோடு இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இதன் மூலம் முதல் முதலாக இந்தியன் 2 படத்தில் இணைய உள்ளனர்.

இந்தியன் 2 படத்தைத் தொடங்குவதில் உதயநிதி ஸ்டாலின் ஆர்வம் காட்டிவரும் நிலையில் படத்தை லைகாவிடம் இருந்து கைப்பற்றி மீதிப்படத்தைத் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

Previous articleஅண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது!
Next articleஎன்னுடைய செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமானது இல்லை… பிரபல பாலிவுட் இயக்குனரை தாக்கிய டாப்ஸி