இளம் நகைச்சுவை நடிகருக்கு பக்கவாதம்.. அள்ளிக்கொடுத்த நெட்டிசன்கள் !

0
242

இளம் நகைச்சுவை நடிகருக்கு பக்கவாதம்.. அள்ளிக்கொடுத்த நெட்டிசன்கள் !

இளம் நகைச்சுவை நடிகரான லோகேஷ் பாப் என்பவருக்கு கடந்த வாரம் பக்கவாத நோய் தாக்கப்பட இப்போது அவருக்கான சிகிச்சைக்குப் பணம் கிடைத்துள்ளது.

நகைச்சுவை தொலைக்காட்சியான ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ’மொக்க ஆஃப் த டே’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி பிரபலமான நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நகைச்சுவையாக நடத்தி வருபவர்கள் லோகேஷ் பாப் மற்றும் குட்டி கோபி.

இந்த தொடரின் பிரபலத்தால் நடிகர் லோகேஷ் பாப்க்கு ’நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய் சேதுபதியோடு நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவர் நடித்திருந்த உடல் இயங்காத கதாபாத்திரம்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைக்காக மருத்துவர்கள் 7 லட்சம் ரூபாய் கேட்க, அதற்கான நிதியை சமூகவலைதளங்களின் மூலம் திரட்ட முடிவு செய்தார் குட்டி கோபி.  அவரது பதிவில் ‘ நண்பர்களே நமது நண்பர், லோகேஷ் பாப் அவரது இடது காலிலும், இடது கையிலும் பக்கவாதம் வந்து செயல் பட முடியாத நிலையில் எம் ஜி எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு 5 முதல் 7 லட்சம் வரை தேவைப்படுகிறது. யாரால் முடியுமோ அவர்கள் தயவு செய்து பண உதவி செய்யுங்கள்’ எனக் கூறி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு வீடியோ பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் ‘சிகிச்சைக்ய்கு தேவையான பணம் கிடைத்துவிட்டது. இனிமேல் யாரும் பணம் அனுப்ப வேண்டாம் எனவும் அந்த பதிவைப் பகிர வேண்டாம்’ எனவும் குட்டி கோபி வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

Previous articleஅரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறை இல்லை – கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.
Next articleகொரானோ வைரஸ்: பலி எண்ணிக்கை 3,000ஆக உயர்ந்ததால் அதிர்ச்சி