சேலஞ்ச் விட்ட நடிகர் மகேஷ்பாபு! நிகழ்த்திக் காட்டிய நடிகர் விஜய்!

Photo of author

By Parthipan K

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு செய்த சேலஞ்சை ஏற்று, அதனை நிகழ்த்திக் காட்டினார் இளையதளபதி விஜய்.

தெலுங்கு திரையுலகில் உள்ள பிரபலங்கள் இடையே கிரீன் சேலஞ்ச் எனப்படும் ஹேஸ்டேக் மூலம் விடப்படும் சவாலானது பிரபலமாகி வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார்.

அப்போது அவர் வீட்டின் தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு அதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் #GreenIndiaChallenge எனும் ஹேஸ்டேக் மூலம் பதிவேற்றினார். அதனை நடிகர் விஜய், ஜூனியர் என்டிஆர், மற்றும் சுருதிஹாசன் ஆகியோருக்கு சேலஞ்ச் செய்து பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த சவாலை ஏற்று நடிகர் விஜய் தற்போது தனது வீட்டு தோட்டத்தில் மரக்கன்று ஒன்றினை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியதுடன், நடிகர் மகேஷ் பாபுவுக்கு நன்றி என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Actor Maheshbabu challenged!  Actor Vijay performed!
Actor Maheshbabu challenged! Actor Vijay performed!

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி வருகின்றது.