பாரதிராஜாவின் மகனும் தமிழ் திரை உலகில் நடிகனாகவும் இயக்குனர் ஆகவும் திகழ்ந்த மனோஜ் அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். இந்த நிலையில், நடிகர் மனோஜ் மற்றும் அவரது மனைவி இணைந்து கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருவரும் கொடுத்த பேட்டியில் பேசியிருப்பதாவது :-
எப்பொழுதும் இரவு லைட்டை ஆஃப் செய்துவிட்டு தூங்கக் கூடியது என்னுடைய பழக்கமாக இருந்த நிலையில், திருமணத்திற்கு பின் இப்பொழுதும் என் படுக்கை அறையில் லைட் எரிந்து கொண்டு மட்டுமே இருக்க துவங்கின. காரணம் என்னுடைய மனைவிக்கு இருட்டு என்றால் மிகவும் பயம். இதுகூட பரவாயில்லை, இரவு நேரங்களில் பாத்ரூம் செல்ல வேண்டும் என்றால் கூட என்னை மிகவும் டார்ச்சர் செய்து விடுவார். பாத்ரூம் வாசல் வரை தன்னை அழைத்து வந்து விட்டு விட்டு சென்று விடுங்கள் என கூறி என்னை தூங்க விடாமல் கொடுமை படுத்துவார் என்பது போல விளையாட்டாக தன்னுடைய மனைவி குறித்து நடிகர் மனோஜ் தெரிவித்திருக்கக்கூடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் மனோஜ் அவர்களின் இறப்பை தாங்க முடியாமல் இயக்குனர் பாரதிராஜா அவர்களும் மனோஜின் மனைவியான நந்தனா அவர்களும் மீள முடியாத துயரத்தில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு பலரும் ஆறுதல் கூறிவரும் நிலையில் இவர்களை தேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் மனோஜ் அவர்களுக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நெஞ்சு வலி ஏற்பட்டே அவரது உயிர் ஆனது உடலை விட்டு பிரிந்திருக்கிறது.
தமிழ் திரையுலகில் நடிகராக தன்னுடைய தந்தையார் அறிமுகப்படுத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் தன்னுடைய தந்தை மணிரத்தினம் சங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களுடன் பணி புரிந்து இயக்குனராக முயற்சித்த பொழுதும் அதுவும் மனோஜ் அவர்களுக்கு வெற்றி கொடுக்கவில்லை என்பது மிகப்பெரிய துயரம் முன்பு இருக்கிறது.