நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல் நலக்குறைவு! ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக திகழ்பவர் மன்சூர் அலிகான் ஆகும்.கடந்த சில வருடங்களாக குண சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.மேலும் இவர் கன்னடம்,மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் 1991 ம் ஆண்டு டைரக்டர் ஆர்,கே.செல்வமணி டைரைக்சனில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்த படம் கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது..இந்த படத்தில் இருந்து நிறைய வாய்ப்புகள் இவரை தேடி வந்தன.
இவர் 1999 ம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியில் பெரியகுளம் தொகுதியில் 1 இலட்சம் வாக்குகள் பெற்று 3 வது இடத்தை பிடித்தார்.அதன் பிறகு சில, பல விசயங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இதே போல் கடந்த 2019 ம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் அவர் செய்த நுட்பமான பிரச்சாரங்கள் அனைவரையும் கவர்ந்தது.
மன்சூர் அலிகான் சமீபத்தில் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியும் தொடங்கினார்.மேலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தொண்டாமுத்தூர் பகுதியில் சுயேச்சையாக போட்டி இட்டு வெறும் 428 வாக்குகள் மட்டுமே பெற்று படு தோல்வியை சந்தித்தார்.நடிகர் விவேக் அவர்கள் இறந்த பொழுது கூட பொது மக்களுக்கு அதரவாக அரசுக்கு எதிராக சில சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் த்டீரென்று நடிகர் மன்சூர் அலிகான் சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.