நடிகர் மயில்சாமி எனக்கு அப்பப்போ கால் பண்ணி 20,000 பணம் கேட்பாரு!! ஆர்.ஜே பாலாஜி உடைத்த உண்மை!!

0
235
Actor Mayilsamy calls me every now and then and asks for 20,000!! RJ Balaji broke the truth!!
Actor Mayilsamy calls me every now and then and asks for 20,000!! RJ Balaji broke the truth!!

ஆர்.ஜே பாலாஜி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் மயில்சாமி குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவை பின்வருமாறு :-

நடிகர் மயில்சாமி உயிரோடு இருக்கும் பொழுது எனக்கு அடிக்கடி கால் செய்வார். அப்பொழுதெல்லாம் என்னிடம் 20000 ரூபாய் பணம் கேட்பாரு. நானும் எதற்கு என்றெல்லாம் கேட்காமல் உடனடியாக கொடுத்து விடுவேன். அவருடைய இறுதி நாள் வரை இது தொடர்ந்தது. ஆனால் என்றுமே நான் இதை எதற்காக நீங்கள் கேட்கிறீர்கள் என்று கேட்டதில்லை.

அதற்கு காரணம், அவர் என்றுமே தனக்காக எதையும் என்னிடம் கேட்கவில்லை. அனைவருக்கும் உதவக்கூடிய மனம் படைத்த அவர், அவரிடம் போதுமான பணம் இல்லை என்றால் மட்டுமே தனக்கு போன் செய்து கேட்பார் என்று மனம் திறந்து கூறி இருக்கிறார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி அவர்கள்.

இவை மட்டும் அல்லாது அவருடன் நேரில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றையும் தெரிவித்து பூரிப்படைந்துள்ளார். அதற்குக் காரணம் இவர்கள் இருவரும் வெளியே செல்லும் பொழுது நடிகர் மயில்சாமி அவர்கள் செய்த ஒரு செயல்தான் .

அது, படப்பிடிப்பு தளத்திலிருந்து இருவரும் ஒன்றாக செல்லும் பொழுது ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிருந்த துப்புரவு பணியாளர்களை கண்டவுடன் நேரில் சென்று அவர்களுக்கு ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் அனைவருக்கும் கொடுத்திருக்கிறார். கொடுத்துவிட்டு நடிகர் ஆர்.ஜே பாலாஜி இடம் பார்த்தீர்களா அவர்களுடைய முகத்தில் எவ்வளவு சந்தோஷம் என்று கூறி நடிகர் மயில்சாமி அவர்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இதை பார்த்த முதல் தானும் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்ததாக நடிகர் ஆர்.ஜே பாலாஜி அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநான்தான் இந்த வாழ்க்கைக்குள் விக்னேஷ் சிவனை இழுத்தேன்!! நாங்கள் இணைய இது தான் காரணம்..நயன்தாரா சொல்லிய உண்மை!!
Next articleகுளிர்காலத்தில் ஜீரண சக்தியை அதிகரிக்கும் “இஞ்சி சொரசம்” தயார் செய்வது எப்படி?