இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா… வெளியான சூப்பர் தகவல்!

0
330

இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா… வெளியான சூப்பர் தகவல்!

தமிழில் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் ராம். இவருடைய கதைகள் எப்பொழுதும் வித்தியாசமாகவும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தையும் கொண்டிருக்கும்.

பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு  சில வருடங்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தார் இந்நிலையில், இந்நிலையில் மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ஏழுகடல் ஏழுமலை என்ற படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்தில் அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இயக்குனர் ராம் அடுத்து இயக்க உள்ள படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை மிர்ச்சி சிவாவே சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சிவா இதுவரை மென்மையான மற்றும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் ராம் அழுத்தமான மற்றும் அரசியல் ரீதியான படங்களை இயக்குபவர். இவர்கள் இணையும் படம் எப்படி உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டி! யாருடன் முதல் மீட்டிங்? லீக்கான தகவல்! 
Next articleராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!