90 காலகட்டத்தில் பெண்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் முரளியும் ஒருவர். இவர் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் முரளி அவர்கள் ஹீரோவாக மட்டுமின்றி தம்பியாக மற்றும் காதல் மன்னனாகவும் நடித்த தனக்கென தனி ரசிகர் படையை கொண்டிருந்தார் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே.
மேலும் தனது நடிப்பின் மூலம் உச்சம் தொட்ட நடிகர் முரளி நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன் மகன் அதர்வா நடிப்பில் வெளிவந்த பாணா காத்தாடி படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். இதுவே இவருடைய கடைசி திரைப்படம் ஆகவும் அமைந்தது.
தமிழ் சினிமா திரையுலகில் பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் தன்னுடைய மகனுடன் இணைந்து நடித்த பானா காத்தாடி திரைப்படத்துடன் தன்னுடைய திரை வாழ்க்கையை முடித்துவிட்டார் என்றும் கூறலாம். இவர் 2010 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இறைவனடி சேர்ந்தார்.
1990 இல் வெளிவந்த புதுவசந்தம் ,1991இல் வெளிவந்த இதயம் ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது குறிப்பிடத்தக்கது. இவர் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் பல ஆண்டுகள் வரை இவருடைய கதாபாத்திரங்களும் பெயரும் போற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாவா லட்சுமணன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் முரளியை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், முரளி பழகுவதில் மிகவும் தங்கமானவர் அதுமட்டுமின்றி ஒரு நல்ல மனிதரும் கூட…. ஆனால் அவருடைய காலகட்டத்தில் அவரைப் பற்றி கூறப்பட்ட வதந்திகள் அனைத்தும் உண்மையானது தான். அவருக்கு பெண்களுடன் ஆன தொடர்பு இருந்தது என்றும், அவருக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் அவர் அனைத்தையும் காலப்போக்கில் சரி செய்து கொண்டார் என்றும் பாவா லட்சுமணன் அப்பேட்டையில் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.