சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்

Photo of author

By Anand

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்

 

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பின்னாலிருந்து இயக்குவது யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகரும், எழுத்தாளருமான ஆர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சென்னை எழும்பூரில் காவல் அருங்காட்சியம் அமைந்துள்ளது.நேற்று மாலை இதை நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், பொது மக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் காவல் அருங்காட்சியகம்.

 

காவல் துறை நம் நண்பன். நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கிடைத்த சுதந்திரத்திற்கு காவல் துறையினர் உதவியாக இருந்தவர்கள். அந்த வகையில் காவல் துறைக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

 

சாலையில் செல்லும் போது மது அருந்துவது, விதிகளை மீறி செல்லும் போது காவல் துறையிடம் வாக்குவாதம் செய்து அதை வீடியோவாக எடுப்பது உள்ளிட்டவைகள் இப்போது அதிகமாகியிருக்கிறது. காவல் துறைக்கு நாம் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அப்போதுதான் நமக்கான சுதந்திரம் நமக்கான சந்தோஷம் கிடைக்கும்.

 

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது குறைந்திருந்தாலும் 10 குழந்தைகள் சிக்னலில் பிச்சை எடுப்பதை இப்போதும் நாம் பார்க்க முடிகிறது. பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு பின்னால் இருந்து இயக்கும் முகம் யார் என கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.