Cinema

பாகுபலிக்கு பிறகு பிரபாஸின் வரலாற்று சிறப்பு மிகுந்த 3D படம்!!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் ராஜமவுலியின் பாகுபலி படத்தில் நடித்த பின் இந்தியா முழுவதும் பிரபலமானார். இதையடுத்து அவரது படங்கள் பான் இந்தியா முறையில் மூன்று நான்கு மொழிகளில் உருவாகிறது.

பிரபாஸ் ஆதிபுருஷ் என்னும் பிரமாண்ட வரலாற்று படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாஸ் தனது 22 வது படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அவர் ஆதிபுருஷ்’ என பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 

வரலாற்று சிறப்பு மிகுந்த இந்தப் படத்தை ஓம் ராவத் இயக்குகிறார்.  இவர் ஏற்கனவே ஹிந்தியில்’தன்ஹாஜி- த அன்சங்க் வாரியர்’  படத்தை இயக்கியுள்ளார்.

இது தீமையை வெற்றிகொள்ளும் நன்மையை பற்றிய ஒரு இந்திய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் என்று தெரிவித்துள்ளனர்.

டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இந்த பிரமாண்ட 3D படத்தை தயாரிக்கின்றனர்.

இந்தி, தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. வில்லன் கேரக்டரில் நடிக்க பாலிவுட் பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த் படம் பற்றி பிரபாஸ்  கூறியதாவது:” நான் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்தை பற்றி விவரித்தபோது  எனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் பெருமையான விஷயம் என்று கருதினேன். இந்த காவிய கதாபாத்திரத்திற்கு நான் நடிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன் என்றும் நம் நாட்டின் இளைஞர்கள் தங்கள் அன்பை இப்படத்தின் மீது பொழிவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

 

 

Leave a Comment