நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

0
358
#image_title

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி; மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் பிரபு நேற்று முன்தினம் (20-02-2023) அன்று இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து நேற்று காலையில் யூரித்ரா ஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டது. அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Previous articleஅரசு பேருந்தை திருடி வேறு மாநிலத்திற்கு கடத்தல்; பகீர் சம்பவம்! 
Next articleஅமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டி!!