சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கும் சிவாஜி கணேசனின் மகனான பிரபு அவர்கள் இன்று வரையில் தனக்கென தனி ரசிகர் படையை கொண்டவராகவே விளங்குகிறார். தன்னுடைய தந்தை பெயரைக் கொண்டு சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய திறமையாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும் இன்றளவும் தந்தை பெயர் இன்றி தனித்து நிற்கிறார். அப்படிப்பட்ட நடிகர் பிரபு அவர்களுக்கு திடீரென மூளையில் அறுவை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து தற்பொழுது அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நடிகர் பிரபு. அப்பொழுது அவரது மூளையை ஆராய்ச்சி அப்பொழுது அவரது தலையை ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது நடுமூளை தமனியின் பிளவு பகுதியில் உள்ள உள் கரோடிட் தமனியின் மேல் பகுதியில் வீக்கம் அல்லது பலூன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தற்பொழுது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாக zoom வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் நடிகர் பிரபு தற்போது அவருடைய வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் அவருடைய குடும்பத்தார் அவரை நன்றாக கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திடீரென இந்த தகவல் வெளிவரவும் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.