நயன்தாரா கொஞ்சம் கம்மியா நடிங்க.. நடிகர் பிரதீப் ரங்கநாதன் ட்வீட்!!

Photo of author

By Jeevitha

Cinema News: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமண ஆவணப்படம் நயன்தாரா பிறந்தநாளையொட்டி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பல சர்ச்சைகள் மத்தியில் வெளியானது. அதை பற்றி எக்ஸ் தளத்தில் நயன்தாரா கொஞ்சம் கம்மியா நடிங்க எனநடிகர் பிரதீப் ரங்கநாதன்  ட்வீட் போட்டுள்ளார்.

நயன்தாராவின் ஆவணப்படம் வெளியிட தனுஷ் தடையாக இருந்ததாக பல சர்ச்சைகள் வெடித்தன. இந்த படத்தில் நானும் ரவுடி தான் காட்சி இடம் பெற்று இருந்ததால் வெறும் 3 நிமிட காட்சிக்கு சுமார் 10 கோடி கேட்டு தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் நயன்தாரா திருமண ஆவணப்படம் வெளியானது.

அதை நெட்டிசன்கள் பலர் பார்த்து நயன்தாரா ஆவணப்படம் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் போன்ற படத்தின் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். அதுவும் பெரும் வைரலாகி வருகிறது. இதற்கிடையே தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்னைக்கள் பற்றி எந்த ஒரு நடிகர்களும் பேசவில்லை. ஆனால் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் தள பக்கத்தில் போட்ட டிவிட் பெரும் வைரலாகி வருகிறது.

அதில் நானும் ரவுடி தான் படத்தை பற்றி சிறப்பாக பாராட்டி உள்ளார். அதில் நடித்த நட்சத்திரங்களையும் பற்றி பாராட்டி உள்ளார். ஆனால் அதே டிவிட்-ல் நயன்தாராவை கொஞ்சம் கம்மியா நடிங்க என கூறியுள்ளார். அது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் விக்னேஷ் சிவன் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். மீண்டும் அவர்களை நேரில் பார்க்க வேண்டிய நிலை கட்டாயம் உள்ளது. இவர் இப்படி டிவிட் செய்தது பற்றி நெட்டிசன்கள் வசமாக நடிகர் பிரதீப் ரங்கநாதன், நயன் மற்றும் விக்கியிடம் மாட்டிக்கொண்டார் என கூறி வருகின்றனர்.