தளபதி 66ல் இணையவிருக்கும் விஜய்யின் ஆஸ்தான வில்லன்!

0
92
Representative image

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 66ல் விஜய் படங்களில் நடித்த டாப் வில்லன் ஒருவர் இணையவிருக்கிறார்.

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நெல்சன் 2018ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்காக நார்வேவில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றார்.

அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் இணைந்தார். இந்த திரைப்படத்தின் ‘செல்லம்மா’ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. ஒரு வாரத்திற்கு முன்பு இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த திரைப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களுக்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாக இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு தனது மூன்றாவது படமே தளபதி விஜய்யுடன் அமைந்துவிட்டது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் யோகிபாபுவும் இணைந்துள்ளார். சர்க்காரை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

தளபதி விஜய்யும் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் என அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். அந்த புதிய முயற்சியில் மிகப்பெரிய வெற்றியையும் காண்கிறார்.

பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து தளபதியின் அடுத்த திரைப்படத்தை பற்றி தினம் ஒரு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு இயக்குனர் வம்சி தான் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

தற்பொழுது விஜய் ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய்யின் ஆஸ்தான வில்லன் ஒருவர் தளபதி 66 இல் விஜய்யுடன் திரைக்களத்தில் மோத இருக்கிறார்.

கில்லி, சிவகாசி, போக்கிரி என அடுத்தடுத்து ப்ளாக்பஸ்டெர் ஹிட்டுகளை அள்ளிக்கொடுத்த விஜய் – பிரகாஷ்ராஜ் கூட்டணி மறுபடியும் தளபதி 66 இல் இணையவிருக்கிறது.

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக கூறியுள்ளார்.

விஜய்யின் இந்த திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் மகளும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன.

விஜய்யின் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த கொண்டாட்டம் அதிரடியாக வந்துகொண்டே உள்ளது .

 

 

 

 

author avatar
Parthipan K