Actor prashanth: 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படமே சூப்பர் ஹிட். இந்த படத்திலேயே இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். காதல் படங்களில் தொடந்து நடித்ததால் இவருக்கு காதல் இளவரசன் என்கிற பட்டமும் கிடைத்தது.
மணிரத்னம், பாலச்சந்தர், ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தார். இரட்டை வேடத்தில் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிரசாந்துக்கு திருமண வாழ்வு சரியாக அமையவில்லை. இதனால் அவரின் இமேஜ் ஸ்பாயில் ஆனது.
அதன்பின் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துகொண்டார். அபபா தியாகராஜன் இயக்கத்தில் சில படங்களில் நடித்தாலும் அவை ஹிட் அடிக்கவில்லை. ஒருகட்டத்தில் படங்களில் நடிப்பதை குறைத்துகொண்டார். வெங்கட் பிரபுவிஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் அவரின் நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே 2002ம் வருடம் உருவான தமிழ் எனும் படத்தில் ஹரியின் இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருந்தார். இப்போது 23 வருடங்களுக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. பிரசாந்துக்கு ஏப்ரல் 6ம் தேதியான இன்று பிறந்தநாள் என்பதால் இன்று இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் சாய் பல்லவி, கயாடு லோஹர், பூஜா ஹெக்டே ஆகிய மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் மூவருமே இப்போது டாப் மோஸ்ட் நடிகைகளாக இருப்பவர்கள். டிராகன் படம் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியிருப்பவர் கயாடு லோஹர். அமரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றவர் சாய் பல்லவி. தெலுங்கில் முன்னனி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. மொத்தத்தில் மூன்று லட்டு ஹீரோயின்களை தட்டி தூக்கியிருக்கிறார் பிரசாந்த்.