என்னுடைய திருமணத்திற்கு  வருகிறவர்களுக்கு கண்டிப்பா கொரோனா டெஸ்ட் செய்யப்படும்!!  பிரபல நடிகரின் அதிரடி முடிவு!!

0
136

வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி தெலுங்கு பிரபல நடிகர் ராணா- விற்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இவர் நீண்ட நாட்களாக காதலித்துக் கொண்டிருக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த மிஷிகா பஜாஜ் என்பவரை மணக்கவிருக்கிறார்.

இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பம், என்னை நோக்கி பாயும் தோட்டா, பெங்களூர் டேஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் திரை உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு இவர் நடித்த பாகுபலியின் வில்லன் கதாபாத்திரமே. 

தற்பொழுது இவரது திருமணம் ஐதராபாத்தில் அவருக்கு சொந்தமான ஸ்டுடியோ ஒன்றில் நடக்க இருப்பதாகவும், அவரது திருமணத்திற்கு நெருங்கிய சொந்தம் மற்றும் உறவினர்களை மட்டும் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், ராணாவின்  திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அவரது தந்தை கட்டுப்பாடு விதித்துள்ளார்.

Previous articleபெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடந்த விபரீத சம்பவம்!!
Next articleநவம்பர் மாதம் வரை இலவசம்:?முதல்வர் அறிவிப்பு