Viijayakanth: சினிமாவில் எந்த பின்னணி இல்லாமல் நுழைந்து முன்னேறியவர்தான் விஜயகாந்த். மதுரையில் அப்பாவின் ரைஸ் மில்லை பார்த்துக்கொண்டிருந்த விஜயகாந்துக்கு நடிக்க வேண்டும் என்கிற ஆசை வரவே சென்னை வந்து வாய்ப்பு தேடினார். பல அவமானங்களையும் தாண்டியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
துவக்கத்தில் தடுமாறினாலும் விஜயின் அப்பா எஸ்.கே.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம் அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால், அந்த ஹிட்டை தக்க வைத்துக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அடுத்தடுத்து அமையவில்லை. அதன்பின் மீண்டும் எஸ்.ஏ.சி சந்திரசேகர் இயக்கிய சாட்சி படம் ஹிட் அடித்தது. சினிமாவில் ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். விஜயகாந்தை வைத்து ஆக்சன் படங்கள் எடுக்கலாம் என்கிற நம்பிக்கை இயக்குனர்களுக்கு வந்தது.
ஆக்சன் ஹீரோவாக நடித்து கொண்டிருந்த விஜயகாந்துக்கு வித்தியாசமான வேடங்களை கொடுத்து அவரால் நடிக்கவும் முடியும் என ரசிகர்களுக்கு காட்டினார். அப்படி அவர் இயக்கிய வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண் போன்ற எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய நடிகரும், விஜயகாந்தின் நண்பருமான ராதாரவி ’வைதேகி காத்திருந்தாள் படத்தில் நான் விஜயகாந்தை பெல்ட்டால் அடிப்பது போல காட்சி. விஜயகாந்த் அப்பவே பெரிய ஆக்ஷன் ஹீரோ. எனவே, அவரை எப்படி அடிப்பது என தயங்கினேன். ஆனால், விஜயகாந்தோ ‘நீ எதையும் யோசிக்காத.. நீ அடி’ என அடிக்க சொன்னார். விஜயகாந்துடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பு என வந்துவிட்டால் விஜயகாந்த் எதையுமே யோசிக்கமாட்டார். இயக்குனர் என்ன சொன்னாலும் அதை செய்துவிடுவார்’ என பகிர்ந்துகொண்டார்.