பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய ரஜினிகாந்த்!

Photo of author

By Sakthi

பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய ரஜினிகாந்த்!

Sakthi

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிகத் தீவிரமாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. ஆனாலும் அதனை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகவே இருந்து வருகிறது.காரணம் பொதுமக்களின் அலட்சியம்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் என்னதான் புதிய புதிய கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொதுமக்கள் அதனை சரிவர கடைப்பிடிப்பதே இந்த நோய் தொற்றின் வேகத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதனால் இன்று முதல் தமிழகத்தில் மிகக்கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று நேற்றைய தினமே முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதன்படி பொதுமக்கள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகள் என்று பல விதமாகவும் நிவாரண நிதிக்காக நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறதுஅந்த வகையில், நடிகர் அஜித்குமார் நிவாரண நிதிக்காக ரூபாய் 25 லட்சம் கொடுத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னரே நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன்களும் ஒன்றிணைந்து நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் நிவாரணத் தொகையாக ஒரு கோடி ரூபாயை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் இந்த தொற்றிற்க்கான நிவாரண நிதியை வழங்கி இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நோய் தொற்று தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் அளித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் சார்பாக அவருடைய மகள் சௌந்தர்யா நிதி வழங்கி இருக்கிறார்.இவர்கள் நிதிகொடுப்பது எல்லாம் சரிதான் ஆனால் அதனை கடந்த ஒரு வருட காலமாக கொடுக்காமல் இப்போது மட்டும் எதற்காக கொடுக்க வேண்டும் என்றும் ஒரு சிலர் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த ஒரு வருட காலமாகவே இந்த நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு இந்த நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக ஏற்படும் செலவினங்களை கட்டுப்படுத்த இயலாமல் மத்திய, மாநில அரசுகள் சற்றே திணறிய வந்திருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் இந்த நடிகர் நடிகையர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

ஆனால் தற்போது மற்றும் அவர்கள் நிதி உதவி வழங்குவதற்கான காரணம் என்ன என்றும் ஒரு சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இத்தனை நாட்களாக பொது மக்களும், அரசாங்கமும், இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம் வேடிக்கை பார்த்த நடிகர் சங்கமும் நடிகர் நடிகைகளும் இப்பொழுது மட்டும் நிதிகளை வாரி வழங்குவது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.