திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த்!! ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்!!
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கி உள்ளர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மகளின் விருப்பத்திற்காக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இப்படம் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் உருவாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு பணிகள் நடந்தது. பின்னர் மும்பையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மே 8ஆம் தேதி லால் சலாம் படத்தின் ரஜினியின் போஸ்டர் “மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்” என வெளியானது, இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் லால் சலாம் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் திருவண்ணாமலை வந்துள்ளார். இத்தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் அவரைக் காண அங்கு குவிந்து வருகின்றனர். ரஜினியை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
இதனால் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டு பின்னர் சரி செய்ய பட்டது. பின்னர், ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் ‘தலைவா’ என்று கத்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து,நடிகர் ரஜினிகாந்த், தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான அண்ணாமலையார் – உண்ணாமலை அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு படப்பிடிப்பிற்கு திரும்பினார். திருவண்ணாமலையில் தரிசனம் செய்வது அவரது நீண்ட நாள் ஆசையாம்.
இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.