Rajinikanth : அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி 

0
484
Actor Rajinikanth responds to Minister Duraimurugan's speech
Actor Rajinikanth responds to Minister Duraimurugan's speech

Rajinikanth : சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களை தாக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதாவது பழைய மாணவர்களை சமாளிப்பது எளிதானதல்ல என்றும், இதை முதல்வர் முக ஸ்டாலின் சாதாரணமாக செய்கிறார் என்றும் பேசியிருந்தார்.

மூத்த அமைச்சர்கள் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து திமுகவின் மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகியும், பல் விழுந்து தாடி நரைத்து போயிருந்தாலும் நடித்து கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டதா? அப்படி தான் என பதிலளித்திருந்தார். இது நேரிடையாக ரஜினியை தாக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில் திமுக அமைச்சர் துரைமுருகனின் இந்த கருத்து குறித்து நடிகர் ரஜினிகாந்த்திடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், துரைமுருகன் எனது நீண்டகால நண்பர், அவரை எனக்கு பிடிக்கும் என்றும், அவருடனான நட்பு தொடரும், அவர் பேசியதில் தனக்கு வருத்தமில்லை என்று கூறியுள்ளார்.

Previous articleகுட் நியூஸ்.. சட்டசபையில் அறிவித்தபடி பெண்களுக்கு ரூ.100,000 வழங்கும் தமிழக அரசு!!
Next articleகல்வியை காவிமயமாக்கும் தீர்மானங்கள்! விசிக எம்பி ரவிக்குமார் விமர்சனம்