நடிகர் ரஞ்சித்தை கண்டு கொள்ளாத அமமுக! விரைவில் வெளியேறுகிறாரா?

0
207
Actor Ranjith facing problems in AMMK-News4 Tamil Online Tamil News Channel
Actor Ranjith facing problems in AMMK-News4 Tamil Online Tamil News Channel

நடிகர் ரஞ்சித்தை கண்டு கொள்ளாத அமமுக! விரைவில் வெளியேறுகிறாரா?

கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாமகவிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித் ஊழலை ஒழிக்க போவதாக கூறி டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

பின்னர் மக்களவை தேர்தலின் போது அமமுகவில் தனக்கு ஏற்பட்ட கடுமையான மற்றும் கசப்பான அனுபவங்களால் அமமுகவில் இருந்து தற்போது ஒதுங்கியே இருக்கும் நடிகர் ரஞ்சித் விரைவில் அமமுகவில் இருந்தும்வெளியேறுகிறார் என்று புதிய செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தனியாக தான் தேர்தலை சந்திப்போம் என கூறிய பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து பாமகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார் ரஞ்சித். இந்நிலையில் புதியதாக இணைந்த அமமுகவில் கடந்த தேர்தலில் தானாகவே பல மாவட்டங்களுக்கு பிரச்சாரத்துக்கு சென்றார். ஆனால் எந்த மாவட்டத்திலும் அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள் நடிகர் ரஞ்சித்தை வரவேற்கவோ, இந்த இடத்தில் பேசுங்கள் என்று திட்டமிட்டுக் கொடுக்கவோ இல்லை.

குறிப்பாக சொல்லப் போனால் யாரும் நடிகர் ரஞ்சித்தை கண்டுகொள்ளவும் இல்லை. இன்னும் பல மாவட்டச் செயலாளர்கள் நடிகர் ரஞ்சித்தின் போனைக் கூட எடுத்ததில்லை என்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி தானாக தன் சொந்த செலவில் தினகரனுக்காக பிரச்சாரம் செய்ய நடிகர் ரஞ்சித் சென்றிருக்கிறார்.

இதுபற்றி அமமுக பொதுச்செயலாளர் தினகரனிடம் முறையிட்டும் அவர் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் நடைபெறவுள்ள தீரன் சின்னமலை தொடர்பான ஆடிப்பெருக்கு நிகழ்விலும் தான் புறக்கணிக்கப்படுவதால் அமமுகவில் இருந்து புறப்படலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ரஞ்சித்.

மேலும் அவரை தங்கள் பக்கம் அழைத்துச் செல்ல பாஜக தயாராக இருக்கிற்து என்கிறார்கள் ரஞ்சித்துக்கு நெருக்கமான நண்பர்கள். ஆனாலும் திமுகவுக்கு செல்வதா, பாஜகவுக்கு செல்வதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம் நடிகர் ரஞ்சித். அதேநேரத்தில் அமமுகவில் இருந்து விலகுவதில் உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள்.

அரசியலுக்கு வந்ததும் மாநில துணைத்தலைவர் பதவியை கொடுத்து தொடக்கத்திலேயே பாமகவின் முக்கிய பொதுக்கூட்டங்களில் நடிகர் ரஞ்சித்திற்கு பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதே நேரத்தில் புதியதாக இணைந்தவர் என்று பார்க்காமல் பாமக தொண்டர்களும் அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கினார்கள். இதையெல்லாம் மதிக்காமல் அவசரப்பட்டு வெளியேறி விட்டோமா என்றும் நடிகர் புலம்பி வருகிறார் என்கிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleபாமக அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்! உருக்கமான பேச்சு!
Next articleஅன்புமணி! திருமா ! யாருடைய கோரிக்கையை ஏற்பார் மோடி?