மாரடைப்பு காரணமாக நடிகர் ஆர்.எஸ் சிவாஜி காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

0
46

மாரடைப்பு காரணமாக நடிகர் ஆர்.எஸ் சிவாஜி காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

பிரபல நடிகர் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் இன்று(செப்டம்பர்2) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் முதல் குணா, சத்யா, மைக்கேல் மதன காமராசன், அபூர்வ சகோதரர்கள், உன்னைப் போல் ஒருவன் போன்ற பல படங்களில் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் நடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகர் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் நடித்துள்ளார். கடந்த வருடம் நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கதாப்பாத்திரத்திலும், குணச்சித்ர வேடங்களிலும் நடிகர் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் நடித்துள்ளார்.

நடிகர் யோகி பாபு நடிப்பில் நேற்று(செப்டம்பர்1) வெளியான லக்கி மேன் திரைப்படத்தில் நடிகர் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பழம்பெரும் துணை நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர் சந்தானத்தின் மகன் ஆவார். மேலும் நடிகர் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதி அவர்களின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

இந்நிலையில் நடிகர் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் இன்று(செப்டம்பர்2) அவரது வீட்டில் இருக்கும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மறைந்த நடிகர் ஆர்.எஸ் சிவாஜி அவர்களின் உடல் அஞ்சலிக்காக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.