நடிகர் சரத்பாபு இன்று காலமானார்!!

0
205
Actor Sarathbabu passed away today!!
Actor Sarathbabu passed away today!!

நடிகர் சரத்பாபு இன்று காலமானார்!!

நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் இன்று காலமானார். ஏற்கனவே ஒரு முறை சரத்பாபு இறந்து விட்டார் என பொய்யான தகவல் சமுக வலைதளங்களில் பரவியது. இதை அவரது தங்கை மறுத்தார். நடிகர் சரத்பாபு 1973 ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். பிறகு இயக்குனர் K. பாலச்சந்தர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  இதை தொடர்ந்து தமிழில் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், சட்டம், அண்ணாமலை, முத்து என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் பாபி சிம்ஹா  நடித்த வசந்த முல்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டார். பிறகு மேலும் உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் அவருக்கு செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் இன்று காலை அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. மதியம் உடலில் உள்ள பல உறுப்புகள் செயலிழந்ததால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇந்த நம்பர் இருந்தா போதும்!! ரேஷன் பொருட்களை பத்தி தெரிஞ்சிக்கலாம்!!
Next articleகோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!