செக் மோசடி வழக்கு அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்! அதிர்ச்சியில் சரத்குமார் ராதிகா!

Photo of author

By Sakthi

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு ஓராண்டுகாலம்.சிறைதண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருக்கும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சென்ற 2014 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தயாரிக்க திட்டம் போட்டது. இதற்காக 15 கோடி ரூபாய் கடனை ரேடியண்ட் மீடியா என்ற நிறுவனத்திடம் இருந்துபெற்றது.

அந்தப் பணத்தால் 2015ஆம் வருடம் மார்ச் மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விடுவதாகவும் பணத்தை திருப்பிக் கொடுத்த பின்னர்தான் திரைப்படத்தை வெளியிடுவோம் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரவாதம் கொடுத்தபடி பணத்தை திருப்பிக் கொடுக்காமல் வேறு ஒரு திரைப்படத்தை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் தயார் செய்ததால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் இருவரும் கொடுத்த 7 செக்கில் பணமில்லை என்று திரும்பி அனுப்பப்பட்ட நிலையில், நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா உள்ளிட்டோரின் மீதும் ஸ்டீபன் என்பவரின் மீதும் வழக்குத்தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையென்றால் அரஸ்ட்வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்ததை தொடர்ந்து இருவரும் நேரில் ஆஜராகியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், சென்னை பெருநகரில் இருக்கின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்க கூடிய நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதனால் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா மற்றும் ஸ்டீபனுக்கு ஒரு வருட காலம் சிறை தண்டனை உறுதியாகி உள்ளது.