2 பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து !!! ஒய்+ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிரா அரசு!!!
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு நடிகர் ஷாரூக்கான் அவர்களுக்கு ஒய்+ பாதுகாப்பு அளித்துள்ளது.
இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஷாரூக்கான் அவர்கள் நடித்து இந்த ஆண்டு பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இரண்டு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது.
இதில் பதான் திரைப்படம் உலக அளவில் 1000 கோடி ரூபாய்க்கு மேலும், ஜான் திரைப்படம் உலக அளவில் 1100 கோடி ரூபாய்க்கு மேலும் வசூல் செய்து உலக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஒரே வருடத்தில் இரண்டு முறை 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை செய்த திரைப்படங்களை தந்த நடிகர் என்ற சாதனையை ஷாரூக்கான் அவர்கள் படைத்துள்ளார்.
மேலும் நடிகர் ஷாரூக்கான் அவர்களுடைய நடிப்பில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் டுங்கி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ஒய்+ பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும் ஷாருக்கான் எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய ஆறு கமாண்டோ காவலர்கள் உடன். செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய வி.ஐ.பி பாதுகாப்பு சிறப்பு ஐ.ஜி திலீப் சாவந்த் அவர்கள் “பிரபல நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் தற்பொழுது அவருக்கு ஒய்+ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருடன் எப்பெழுதும் துப்பாக்கி ஏந்திய 6 கமாண்டோ காவலர்கள் உடன். இருப்பார்கள். நடிகர் ஷாரூக்கான் அவர்கள் இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய ஆறு கமாண்டோக்கள் உடன் வருவார்கள்.
இது தவிர நடிகர் ஷாரூக்கான் அவர்களின் வீட்டில் ஆயுதம் ஏந்திய நான்கு போலீசார் எப்பொழுதும் பாதுகாப்பு பணியில் இருப்பார். நடிகர். ஷாரூக்கான் அவர்கள் நடித்த பதான் மற்றும் ஜவான் இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான் அவர்களின் உயிருக்கு ஆபத்து கணிசமாக அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. உளவுத்துறை கொடுத்துள்ள எச்சரிக்கையாய் பேரில் நடிகர் ஷாரூக்கான் அவர்களுக்கு ஒய்+ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.