விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். மேலும், திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார்.
அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து மட்டுமே அரசியல் செய்து வருகிறார். காட்சி துவங்கி ஒரு வருடம் ஆகியும் இன்னமும் அவர் செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை. செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் சொன்னால் அவருக்கு ஒன்னும் தெரியாது என்பது தெரிந்துவிடும் என்றும் திமுகவினர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
முதலில் விஜய் செய்தியாளர் சந்திப்பை நடத்தட்டும் என்றே பலரும் பேசுகிறார்கள். இந்நிலையில், விஜயின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவரும், நடிகருமான ஷாம் ஊடகங்களில் விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், விஜயை விமர்சிப்பவர்கள் பற்றி பேசியிருக்கிறார்.
விஜய்க்கு பேச வராது. பிரெஸ் மீட் வைக்க சொல்லுங்க என என்னென்னவோ பேசுகிறார்கள். ஆனால், அவர் அமைதியா இருக்கார் அவ்வளவுதான். நம்ம ஊரில் யாராவது கத்தி கத்தி பேசினா அவங்க பெரிய ஆளுன்னு நம்பும் ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு. ஆனால், அப்படி கத்தி கத்தி பேசுபவர்கள் எல்லாம் விஜய்யின் அறிவுக்கு முன்னாடி ஒரு பக்கத்துல கூட வர முடியாது. யார் யாரே அவருக்கு அட்வைஸ் பண்றதை பார்க்கும்போது எனக்கு காமெடியாதான் இருக்கிறது’ என சொல்லியிருக்கிறார்.