ஆக்சிசன் விவகாரம்! முதல்வரை மிரட்டிய நபர்!

0
124

நோய் தொற்று காரணமாக ஒட்டுமொத்த நாடும் திகைத்துப் போய் இருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவர் தட்டுப்பாடு, படுக்கை பற்றாக்குறை, என எல்லா மாநில அரசுகளும் மற்றும் பொதுமக்களும் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.நாடுமுழுவதும் தற்சமயம் இருக்கும் சூழ்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே இந்த தொடரில் இருந்து தப்பிக்க இயலும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெல்லி, ஹரியானா, போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகள் அதிக அளவில் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.

அதேபோல உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதன் காரணமாக பலரும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆக்சிஜன் இல்லை என்று பொய்யுரைக்கும் மருத்துவமனைகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை பாயும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், அவருக்கு நடிகர் சித்தார்த் பதிலடி தந்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றன நடிகர் சித்தார்த் மனிதராக இருந்தாலும் சரி,சாமியாராக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி பொய் சொன்னால் அரை விழும் என மிகக் கடுமையாக தெரிவித்திருக்கிறார்.

Previous articleஅதிமுகவின் முக்கிய புள்ளி மாரடைப்பால் மரணமா? திமுகவினர் அடித்த போஸ்டரால் பரபரப்பு!
Next articleமுடிவுக்கு வந்தது மேற்குவங்க தேர்தல்! சுறுசுறுப்பானது தமிழக அரசியல் களம்!