இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையை கிளப்பிய நடிகர் சித்தார்த்…அப்படி என்ன செய்தார் ?

Photo of author

By Savitha

தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சித்தார்த். இவர் நடிகர் என்பதையும் தாண்டி தயரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் மற்றும் பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார். படங்களில் எப்படி இவர் பிரபலமோ அதைவிட அடிக்கடி சமூக ஊடகங்களில் பல பதிவுகளை பதிவிட்டு சர்ச்சையை கிளப்புவதிலும் பிரபலமானவர். தமிழில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் அடுக்கடுக்காக பல படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வருகிறார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன்-2 படத்தில் சித்தார்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை ஷங்கர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சித்தார்த் ஆவேசம்: "தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்" - BBC News தமிழ்

இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது தாய், தந்தையுடன் சுற்றுலா சென்றிருக்கிறார், அப்போது மதுரை விமான நிலையத்தில் இருந்த CPRF அதிகாரிகள் இவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டு இருக்கின்றனர். அதோடு இவர்களை ஹிந்தியில் பேசவும் வறப்புறுதியுள்ளனர், இதனால் ஆத்திரமடைந்த சித்தார்த் வழக்கம்போல சமூக வலைத்தளத்தில் மிகவும் காட்டமாக இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.ஹிந்தியில் பேசியது பெற்றோருக்கு துன்புறுத்தலாம்: நடிகர் சித்தார்த் புகார் |  Dinamalar

இதுகுறித்து அவர் அதனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தாவது, “மனிதர்கள் கூட்டம் அதிகமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் எங்களை காக்க வைத்து CPRF அதிகாரிகள் துன்புறுத்தினர். என் வயதான பெற்றோர்களின் பையிலிருந்த சில நாணயங்களை எடுக்குமாறு அவர்கள் கூறினர், ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று நாங்கள் கோரிக்கை வைத்தும் அவர்கள் தொடர்ந்து ஹிந்தியிலேயே பேசியதோடு எங்களையும் ஹிந்தியில் பேச சொல்லி வற்புறுத்தினார்கள். நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது இது இந்தியா இப்படித்தான் இருக்கும் என்று கூறினார்கள், வேலையில்லாதவர்கள் தான் அதிகாரம் செலுத்துகின்றனர்” என்று தனது ஆதங்கத்தை சமூக ஊடகம் வாயிலாக தெரிவித்துள்ளார்.