இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !! 

Photo of author

By Parthipan K

இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !! 

Parthipan K

 

இவர்கள் இணைந்து நடித்த ஒரே படத்திலேயே தளபதியை பற்றி கணித்த நடிகர் சிவாஜி..?நிஜத்திலும் நடந்தது !!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தளபதி விஜய் நடித்த ஒரே திரைப்படமான ஒன்ஸ்மோர் என்ற திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.

தளபதி விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ஒன்ஸ்மோர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.ஏ.சந்திரசேகர் இதனை இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி நடித்திருந்தனர். சூப்பர் ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.8.95 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.இந்தப்படம் சென்டிமெண்ட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுடன் கூடிய சிறப்பான படமாக அமைந்தது என்பதும் சிவாஜியுடன் விஜய் நடித்த ஒரே திரைப்படம் என்ற பெருமையை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

 

மேலும் விஜய் கெரியரில் ஆரம்பகட்டத்தில் இருந்தபோதே அவரை பற்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.இந்த தம்பி விஜய் பின்னாடி சினிமாவுல பெரிய ரவுண்டு வருவார் என சிவாஜி கூறினாராம். அதை தற்போது தெரிவித்து சிவாஜி நினைவு நாளில் விஜய்யின் அப்பா எஸ்ஏசி பதிவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இன்றுடன் இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையடுத்து சிவாஜி கணேசன் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை கொண்டாடி வருகின்றார்கள்.