ஏலியனுடன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான்!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

0
33
#image_title

ஏலியனுடன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான்!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களும் ஏலியனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இது அயலான் டீசர் குறித்த அறிவிப்பு தொடர்பான புகைப்படம் தான்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் உருவாகி வருகின்றது. அயலான் திரைப்படத்தை இயக்குநர் ரவிகுமார் அவர்கள் இயக்கியுள்ளார். ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அயலான் திரைப்படம் 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மேலும் அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அதன்படி அயலான் திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. படக்குழு இந்த அறிவிப்பை புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது. அந்த புகைப்படத்தில் அயலான் திரைப்படத்தின் இயக்குநர் ரவிகுமார், அயலான் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், பின்னர் அயலான் திரைப்படத்தில் நடிக்கும் ஏலியன் கதாப்பாத்திரம் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக வருகின்றது.