நடிகர் சிவகர்த்திகேயனும்-தல அஜித்தும் மோதல்! ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு!

Photo of author

By Parthipan K

நடிகர் சிவகர்த்திகேயனும்-தல அஜித்தும் மோதல்! ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியானத் திரைப்படம் டான். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகனன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், சூரி, மனோபாலா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயனின் 20வது படத்திற்கு பிரின்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், ‘பிரின்ஸ்’திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை கலகலப்பான வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோவில், இயக்குநர் அனுதீப், சிவகார்த்திகேயன்,படத்தின் நாயகி மரியா, சத்யராஜ் ஆகியோர் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு பேசியுள்ளனர். அதில், பிரின்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழியில் தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 24ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக தீபாவளியில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படத்துடன் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் மோதவுள்ளது மேலும்.  அஜித் நடித்து வரும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அஜித்துடன் சிவகார்த்திகேயன் நேரடியாக மோத உள்ளார் என்பது குறிபிடதக்கது