‘பிரின்ஸ்’ படத்தால் ஏற்பட்ட கடும் நஷ்டத்தை ஈடுசெய்ய சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு !

0
219

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரின்ஸ்’. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் பாக்ஸ் ஆபிசில் படுதோல்வியடைந்தது. இந்தியாவை சேர்ந்த இளைஞனுக்கும், பிரிட்டிஷை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது, இந்த காதல் கைகூடியதா இல்லையா என்பது தான் ‘பிரின்ஸ்’ படத்தின் கதை. சுனில் நரங் தயாரித்திருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் வெறும் ரூ.30 கோடி மட்டுமே வசூல் செய்து படுதோல்வி அடைந்தது.Sivakarthikeyan 's Prince Movie Review & Ratings | Hit or Flop?

இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ மற்றும் ‘டாக்டர்’ படங்கள் செய்திருந்த வசூலில் ‘பிரின்ஸ்’ படம் பாதியை கூட வசூல் செய்யவில்லை. இதனால் இப்படத்தின் விநியோகஸ்தருக்கு சுமார் ரூ.12 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டது, விநியோகஸ்தரின் நஷ்டத்தை ஈடுகட்ட சிவகார்த்திகேயன் எடுத்துள்ள முடிவு அவரது ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயனும், தயாரிப்பாளரும் தங்களால் விநியோகஸ்தருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவருக்கு ரூ.3 கோடி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous article#BREAKING : காங்கிரஸ் முன்னாள் தலைவர் மருத்துவமனையில் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமையகம்!
Next articleமீண்டும் 2 லட்சம் டுவிட்டர் கணக்கு முடக்கம்! எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்!