புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்.. வைரலாகும் புகைப்படம்.. மேலும் எஸ்கே21 படம் குறித்த புதிய அப்டேட்!!

0
95

புதிய லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்… வைரலாகும் புகைப்படம்… மேலும் எஸ்கே21 படம் குறித்த புதிய அப்டேட்…

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிக்கும் எஸ்கே21 திரைப்படத்தின் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் நடிகர் சிவகிர்த்திகேயன் அவர்கள் எஸ்கே21 திரைப்படத்திற்காக வைத்துள்ள புதிய லுக் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். எஸ்கே 21 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் எஸ்கே21 திரைப்படத்தை தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் எஸ்கே21 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்பொழுது எஸ்கே21திரைப்படம் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது.

தற்பொழுது வரை காஷ்மீரில் நடைபெற்று வந்த எஸ்கே21 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவதா எஸ்கே 21 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது. சுமார் 75 நாட்களாக நடைபெற்று வந்த எஸ்கே21 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நேற்று(ஆகஸ்ட்31) நிறைவு பெற்றுள்ளதாக எஸ்கே21 திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் எஸ்கே21 திரைப்படத்திற்காக வைத்துள்ள புதிய லுக்கின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.