கேரளாவில் குரங்குகளுக்கும் ஓணம் விருந்து.. விநோத வழிபாடு நடத்திய பக்தர்கள் !!

0
255

கேரளாவில் குரங்குகளுக்கும் ஓணம் விருந்து… விநோத வழிபாடு நடத்திய பக்தர்கள்…

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு குரங்குகளுக்கு ஓணம் விருந்து அளித்து பக்தர்கள் விநோதமான வழிபாடு நடத்தினர்.

கேரளம் மக்களால் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஓணம் பண்டிகையும் முக்கியமான ஒரு பண்டிகை ஆகும். இந்த ஓணம் பண்டிகை பத்து நாட்கள் நடைபெறும். கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்திற்கு உரிய நாளில் ஓணம் விருந்து வைத்து உறவினருடன் உண்டு மகிழ்வர். சாதி மதம் என்ற வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை அறாவடைத் திருநாள் என்று அழைக்கப்படுகின்றது. கேரளா மாநிலம் போலவே தமிழ்நாட்டிலும் மக்கள் பாரம்பரிய உடை அணிந்து உறவினர்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஓணம் பண்டிகையின் கடைசிநாளான திருவோணம் தினம் அன்று சத்யா என்று அழைக்கப்படும் விருந்து அளிக்கப்படுவது வழக்கமான ஒரு நடைமுறை ஆகும். இதையடுத்து கேரளா மாநிலம் கொச்சி மாவட்டத்தில் சாஸ்தாம்கோட்டா என்ற பகுதியில் உள்ள தர்ம சாஸ்தா என்ற கோவிலில் உள்ள நூற்றுக் கணக்கான குரங்குகளுக்கு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.

குரங்குகளுக்கு ஓணம் விருந்து அளிக்கப்படுவதும் அங்கு வசிக்கும் கேரளா மாநில மக்களின் வழக்கமான நடைமுறையாகும். இதையடுத்து வாழை இலையில் பந்தி வைத்து உணவு பரிமாறுவது போலவே அங்கு உள்ள குரங்குகளுக்கு வாழை இலை வைத்து அதில் பழங்கள் போன்ற உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டது.

வாழை இலையில் உணவுப் பொருள்கள் வைக்கும் வரை குரங்குகள் பொறுமையாக காத்திருந்தது. வாழை இலையில் உணவு வைத்து முடிந்த பிறகு குரங்குகள் அனைத்தும் கிழே இறங்கி வந்து வைக்கப்பட்ட விருந்தை ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தது. குரங்குகளுக்கும் ஓணம் விருந்து வைத்த நிகழ்வை அனைவரும் கண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.