நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013-ஆம் ஆண்டு பொன்ராஜ் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளிவந்தது.
அதில் நடிகர் சூரியின் அப்பாவாக நடித்த தவசி “கருப்பன் குசும்பு காரன்” என்ற டயலாக்குகள் இவரை ஞாபகப்படுத்தாமல் இருக்காது. இவரது பெரிய மீசை காமடி கதாபாத்திரத்திற்கும் சரி, வில்லன் கதாபாத்திரத்திற்கும் சரி ஏற்றவாறு பொருந்தி இருந்தது என்றே கூறலாம்.
நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன், மெர்சல் ,ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தவசி.
இந்நிலையில் தற்போது, உணவுக்குழாய் புற்றுநோயோடு போராடும் தவசி, மிகவும் பாதிப்புக்குள்ளாகி உடல் மெலிந்து அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறியுள்ளார். இவரது இந்த நிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் தவசிக்கான மருத்துவச் செலவுகளை சரவணன் எம்.எல்.ஏ தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து டாக்டர் சரவணன் எம்எல்ஏ, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அனைத்து ரசிகர்களும் மக்களும் இவரது செயலை பாராட்டி வருகின்றனர்.
மேலும் நடிகர் தவசியின் நெஞ்சை பதறவைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.