நடிகர் சூரி செய்த அதிர்ச்சிகரமான செயல்! உதயநிதியின் சூப்பர் பதிலடி!
கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு 1 அலை பரவியது.அப்போது அதிக அளவு நமது இந்தியா உயிர் சேதத்தை காணவில்லை.அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் சென்ற ஆண்டு தொற்று சிறிதளவு குறையவே மக்கள் மீண்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனையடுத்து மக்கள் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்த காரணத்தினால் மீண்டும் கொரோனாவானது 2 வது அலையாக உருமாறி பரவ ஆரம்பித்துவிட்டது.அந்தவகையில் இந்த கொரோனா தொற்றின் 2-வது அலையில் இந்தியா பெருமளவு பாதிப்படைந்தது.
இந்த 2 வது அலையில் இந்தியா அதிகப்படியான உயிர்களை இழந்து நிற்கிறது.தொற்று பரவல் குறையா காரணத்தினால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அதனையடுத்து நமது தமிழகத்தில் அதிகளவு தொற்று பரவல் காணப்பட்டதால் மக்கள் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கை வசதிகள் இன்றியும்,ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் தொடர்ந்து பாதித்து வந்தனர்.அரசாங்கம் மக்கள் கூறும் புகார்களுக்கு தேவையான செயல்பாடுகளை அமல்படுத்தியும் அது மக்களுக்கு போதுமானதாக இல்லை.அதனால் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
மக்கள் தங்களால் முடிந்த உதவியை கொரோனா தொற்று நிவாரண நிதியாக தரலாம் எனக் கூறியது.அதனையடுத்து பல சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை மேற்கொண்டனர்.அந்தவகையில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ.1 கோடி ரூபாயை நேரடியாக முதலமைச்சரிடன் கொடுத்தனர்.அதனையடுத்து அஜித் போன்ற பல பிரபலங்கள் கொடுத்து உதவினர்.அந்தவகையில் சூரி அவர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்படைய செய்தது.நடிகர் சூரி அவர்கள் ரூ.10 லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக உதயநிதியிடம் வழங்கினார்.
https://www.instagram.com/p/CPsy9BYByuw/?utm_source=ig_web_copy_link
அவர் வழங்கியது மட்டுமில்லாமல் அவரது மகன் சர்வான்,மகள் வெண்ணிலா ஆகியோரின் சார்பிலும் ரூ.25 ஆயிரம் ரூபாயயை நிவாரண நிதியாக கொடுத்தார்.அவ்வாறு சூரி செய்தது அனைவரயும் வியப்படைய செய்தது.அதற்கு உதயநிதியும் சூரிக்கு நன்றி சொல்லும் விதத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் செய்ததை கூறி நன்றி தெரிவித்திருந்தார்.அதற்கு சூரி,அரசு மற்றும் முன்கள பணியாளர்களும் இந்த கொடுந்த்தொற்றுடன் மக்களுக்காக போர் புரியும் இந்த தருணத்தில் என்னால் இயன்ற பங்களிப்பை தந்துள்ளேன்.ஊர் இழுக்க வேண்டிய தேர் இது இணைந்து செயல்படுவோம் விரைவில் வெல்வோம் என பதிலளித்துள்ளார்.