நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். காக்க காக்க, பிதாமகன், சிங்கம், சிங்கம் 2 உள்ளிட்ட படங்கள் அவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. அவரின் நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் ஒரு தோல்விப்படமாக அமைந்தது. இது சூர்யாவை அப்செட் ஆக்கினாலும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரெட்ரோ, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படம் என நடிக்க துவங்கிவிட்டார்.
இதில் ரெட்ரோ படத்தின் பட வேலைகள் முடிந்துவிட்டது. இந்த படம் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. சூர்யாவுக்கு ஒரு பழக்கம் உண்டு. அவருக்கு கதை பிடிக்கவில்லை. அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என விரும்பினால் இயக்குனர் அதை செய்ய வேண்டும் என நினைப்பார். இல்லையேல் அந்த படத்திலிருந்தே விலகிவிடுவார். கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்திலிருந்து விலகியது கூட அதனால்தான். ஹரியின் இயக்கத்தில் ஒரு படத்திலிருந்து விலக யானை என்கிற பெயரில் அருண்விஜயை வைத்து எடுத்தார் ஹரி. அதேபோல், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்கிற படத்தில் நடிக்கவிருந்தார்.
ஆனால், கதையில் மாற்றம் செய்ய சொல்ல அதை சுதாகொங்கரா ஏற்கவில்லை. எனவே, அந்த படத்திலிருந்து அவர் விலகிவிட இப்போது பராசக்தி என்கிற பெயரில் சிவகார்த்திகேயனை வைத்து அப்படத்தை எடுத்து வருகிறார் சுதாகொங்கரா. இந்நிலையில்தான், ரெட்ரோ படம் உருவாகும்போதும் கார்த்திக் சுப்பாராஜிடம் சூர்யா வேலையை காட்டியிருக்கிறார். படம் பாதி உருவான நிலையில், கதையில் சில மாற்றங்களை சூர்யா செய்ய சொல்ல கார்த்திக் சுப்பாராஜ் அப்செட் ஆகியிருக்கிறார்.
அதன்பின், ஏற்கனவே இப்படி பேசி ஒரு நல்ல படம் (புறநானூறு) நம்ம கையை விட்டு போயிடுச்சி, இந்த படத்தோட கதை நல்லாதான் இருக்கு. இப்படி எல்லா படத்திலும் பண்ணிக்கொண்டிருந்தால் பேர் கெட்டுப்போகும் என சூர்யாவுக்கு நெருக்கமான ஒருவார் சொல்ல அதன்பின் கம்முனு நடித்திருக்கிறார்.