“பிரபல முன்னணி நடிகர் சூர்யா செய்த சம்பவம். சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்திக் இருவரும் இணைந்து பல உதவிகளை செய்து வருகின்றனர். இவர்கள் உதவி செய்யினும், அவர்கள் செய்வது வெளியே தெரிய வராது. அப்படி ஒரு மறைக்கப்பட்ட உண்மை தான் இந்த பதிவு. சமீபத்தில் பேட்டி அளித்துள்ள பின்னணி பாடகர் க்ரிஷ் இதனை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, ‘சிங்கம் 3’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நானும், சூர்யா அண்ணனும் ஒரு காரில் சென்றோம். “நாங்கள் பேசிக் கொண்டே சென்றபோது வழியில் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் அடிபட்டு கிடந்தார். உடனே காரில் இருந்து இறங்கி அவரை தூக்கி காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தார். நான் அவ்வாறு செய்திருக்க மாட்டேன். யோசிப்பேன். ஆனால், சூர்யா அண்ணா செய்தார். எப்படி அண்ணா செய்தீர்கள்?” என்று ஆச்சரியமுடன் கேட்டேன்.
அதற்கு சூர்யா அண்ணனோ, அப்படி நினைத்திருந்தால் இன்று ‘என் தம்பி உயிரோட இருந்திருக்க மாட்டான் என்றார். கல்லூரியில் படித்து வந்த போது கார்த்திக்கு பலமான விபத்து ஒன்று நடந்துள்ளது. அதில் அவர் தலையில் அடிபட்டு சாலையில் மயங்கி கிடந்துள்ளார். அங்கு வந்த ஒருவர், இவரை சிவக்குமார் மகன் போல் தெரிகிறது என்று அடையாளம் கண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அதன் பின்னே உயிர் தப்பியுள்ளார் கார்த்தி’ என சூர்யா கூறியதாக க்ரிஸ் சொன்னார்.