ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவை விரட்டி அடித்த பாமகவினர்! அதிர்ச்சியில் திரையுலகம்
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பாக திரைப்படத்தில் பேசப்பட்ட இருளர் சமூக மக்களின் பிரச்சனை மற்றும் இயக்குனர் இந்த கதையை படமாக்கிய விதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்ததால் பல தரப்பு பாராட்டையும் இந்த படம் பெற்றிருந்தது.
அதே நேரத்தில் இந்த படம் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.அதில் பாதிக்கப்பட்ட குறவர் மக்களை காட்டாமல் இருளர் மக்களை சம்பந்தப்பட்ட கதையில் பாதிக்கப்பட்டவர்களாக காட்டியது,உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்த வன்னிய சமுதாய மக்களை படத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு எதிரியாக காட்டியது என்பன குறிப்பிடத்தக்கது.
அதாவது குறவர் சமுதாயத்தை சேர்ந்த ராஜாகண்ணு என்பவரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி கொலை செய்த இந்த கதையில் எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத வன்னியர் சமுதாயத்தை கொலையாளியுடன் அடையாளப்படுத்தி காட்டியது தான் முதலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.படம் வெளியான ஒரு சில தினங்களில் வன்னியர் சங்க காலண்டரை கொலையாளியின் வீட்டில் இருப்பது போல காட்டியது தவறு என வன்னிய சமுதாய இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்க உடனடியாக படக்குழு அதை மாற்றி அமைத்தது.
அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து நடிகர் சூர்யாவுக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுத, அதற்கு சூர்யா திமிராக ஒரு பதில் அளிக்க என விவகாரம் வேற லெவலில் மாறியது.அரசியல்வாதிகள்,திரைத்துறை மற்றும் ஊடகம் என அனைத்து தரப்பிலும் இது கருத்து சுதந்திரம் என ஜெய் பீம் படக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.ஆனாலும் பாமக தரப்பும் கட்சி சார்பில்லாமல் வன்னிய சமுதாய இளைஞர்களும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து படக்குழுவுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் இயக்குனர் பாரதிராஜாவுக்கு தேவர் படத்தை வைக்கலாமா என பதில் கடிதம் எழுதியதும் அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.அதே நேரத்தில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் திரைத்துறையினர் சாதிய வன்மத்துடன் தான் செயல்படுகின்றனர் என்பதை பாரதிராஜாவின் இந்த மௌனம் மக்களுக்கு எளிதாக உணர்த்தியது.
இந்நிலையில் சூர்யா தரப்பு வன்னியர்களுக்கு எதிராகவும்,பாமகவுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து டிரெண்டிங் செய்தனர்.இதனையடுத்து மேலும் கோபமடைந்த வன்னிய சமுதாயத்தினரும்,பாமகவினரும் சூர்யாவையும் அவரை ஆதரித்த நபர்களையும் எதிர்த்து டிரெண்டிங் செய்து தேசிய அளவில் இந்த விவகாரத்தை பேச வைத்தனர்.இந்நிலையில் நிலைமையை உணர்ந்த இயக்குனர் உடனடியாக வருத்தம் தெரிவித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து படிக்க: தேசிய அளவில் பேசப்படும் ஜெய் பீம் பட பிரச்சனை! விளாசிய பாமகவினர் அச்சத்தில் சூர்யா தரப்பு
வருத்தம் தெரிவித்தால் பிரச்சனை முடிந்து விடும் என பலரும் எண்ணியிருந்த நிலையில் இயக்குனர் வருத்தம் தெரிவிப்பது கால தாமதமான செயல் என்றும்,அதில் சூர்யாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ளது உண்மையெனில் அன்புமணி ராமதாசுக்கு எழுதிய பதிலில் இதை ஏன் குறிப்பிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்கள்.அப்போதைய சூழலில் ஜெய் பீம் பிரச்சனை தேசிய அளவில் செல்வதும்,ஆரம்பத்தில் இருந்த ஆதரவு தனக்கு இல்லை என்று தெரிந்தும் சூர்யா தரப்பு இறங்கி வந்து இயக்குனரை அறிக்கை விட வைத்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் என்ன அறிக்கை விட்டாலும் இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யா வன்னிய சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்கும் வரையில் விட மாட்டோம் என வன்னிய சமுதாய மக்கள் தொடர்ந்து அவருக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர்.அந்த வகையில் சூர்யா,ஜோதிகா மற்றும் அவரது தம்பி கார்த்திக் என யாருடைய படமும் தியேட்டர்களில் வெளியாக விட மாட்டோம் எனவும் எச்சரித்திருந்தனர்.
அந்த வகையில் இன்று மாலை சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.இந்நிலையில் ஏற்கனவே கூறியது போல பாமக தரப்பு சூர்யாவுக்கு எதிராக சமூக வலைத்தளமான ட்விட்டரில் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
சூரியாவின் இன அழிப்பு சதி
ஒரு சமுதாயத்தின் மீது கட்டுக்கதைகளை சுமத்துவது சாதாரணமான செயல் அல்ல. அது அந்த சமுதாயத்தை முழுமையாகவோ, பகுதியாகவோ அழித்தொழிப்பதற்கான இனப்படுகொலை செயல்திட்டத்தின் முதல் படிநிலை ஆகும்#StopVanniyaphobia #EtharkkumThunindhavan #Vanniyaphobia pic.twitter.com/U8truzeqDb
— ARUL Rathinam (@arulgreen) December 15, 2021
We are Dalits and Vanniyar have always been a protective force for the scheduled caste people but suriya are purposely portraying Vanniyars as bad and arrogant which is completely false why so much hate on vanniyar suriya?#StopVanniyaphobia pic.twitter.com/hnYrbg8ig2
— ram (@ramlovelys) December 15, 2021
Since few media and movie makers are looking support from anti vanniyars and earn money, they modify the truth and tries to portray the Vanniyar community in bad light – Tamilvanan#StopVanniyaphobia #EtharkkumThunindhavan @sunpictures@Suriya_offl@pandiraj_dir pic.twitter.com/MJoryIHrlK
— Tamilvanan Govindan (@villagemedia16) December 15, 2021
Jaibhim movie has many false, baseless, unverified & highly defamatory scenes & Statements against Vanniyar community, which is the single largest community in TN, with a sole ill intent to incite violence between various communities in TN.#StopVanniyaphobia pic.twitter.com/mG0HzFuTJA
— ram (@ramlovelys) December 15, 2021
#StopVanniyaphobia tag trending in INDIA .
49.6 K Tweets.
trending in 5th place. pic.twitter.com/alHq2ZOZNJ— சேலம் சுரேந்திரன் (@SalemSurandiran) December 15, 2021
#StopVanniyaphobia என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடும் கருத்துக்கள் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது.படம் வெளியாகி இவ்வளவு நாட்கள் ஆகியிருந்தும் பிரச்சனையை மறக்காமல் பாமக தரப்பு தொடர்ந்து சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.