ஆதரவளித்த கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் சூர்யா!
கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் என்று கல்விக்கொள்கை சர்ச்சையில் நடிகர் சூர்யாவிற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். இதை அடுத்து இதற்கு நடிகர் சூர்யா அவர்கள் நன்றி தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை சென்னையில் சிவக்குமார் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், 20 வருடங்களாக நான் நடித்துக்கொண்டிருப்பதால் நான் பேசினால் பார்ப்பார்கள், கேட்பார்கள் என்பதால் சொல்கிறேன். எல்லோருடைய கோபம், அச்சம் என்னவென்றால் மீண்டும் மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம் சமமான, தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதில் செய்யப்படவில்லை என்பது.
சமமான, தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
நாங்கள் 10 வருடங்களாக மாணவர்களைப் பார்த்து வருகிறோம்.
10 வருடங்களாக 30% மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 30% +2 மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்? எல்லாத் தேர்வுகளையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு வரும். அதை எழுதினால் தான் எந்த டிகிரியாக இருந்தாலும் போகமுடியும்.
நீட் தேர்வு சமூகத்தின் சமநிலையை மாற்றுகிறது. தேர்வுப் பயிற்சி மையங்களின் ஆண்டு வருமானம் ரூ. 5000 கோடி. எட்டாவதிலிருந்து தேர்வுகளை எழுத பயிற்சி மையங்கள் தேவைப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படிப் படிப்பான்? இவ்வளவு நுழைத்தேர்வுகள் இருந்தால் எங்குச் சென்று படிப்பார்கள்?

எல்லோரும் தயவு செய்து விழிப்புணர்வுடன் இருங்கள். கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்காகப் போராடும் சங்கங்கள் என அத்தனை பேரும் விழித்துக்கொள்ளவேண்டும் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார் என்று கல்விக்கொள்கை சர்ச்சையில் நடிகர் சூர்யாவிற்கு அன்புமணி இராமதாசு, சீமானை தொடர்ந்து கமலும் ஆதரவு தெரிவித்தார்.
இதற்கு சூர்யா கூறியதாவது என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு கமலுக்கு நன்றி. என்னுடைய கருத்துக்கு எதிர்வினை கூறியவர்களுக் எதிர்ப்பு தெரிவித்து உங்களுடைய கட்சி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கண்டு பெருமை படுகிறேன் என்று நடிகர் சூர்யா கூறினார்.