அமரனை பின்னுக்கு தள்ளிய கங்குவா!! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Photo of author

By Sakthi

kanguva movie:நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் 22 கோடியை வசூல் செய்து உள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான படம் தான் “கங்குவா”. ஹாலிவுட்டில் திரை உலகில் எடுக்கப்பட்ட படங்கள் பொதுவாக திரைக்கதை, கதைக்குள் கதை சொல்லும் ஒரு கால கட்டத்திலும், மறொரு காலக் கட்டத்திலும் கதைக் களம் நகர்வது போல இருக்கும். இது போன்ற கதைகளை தான் நாம் பீரியட் படம் என்கிறோம்.

ஹாலிவுட் படங்கள் அதிக அளவில் பொருள் செலவில் எடுக்கப்படுவதால் தான் அப்படங்கள்  வெற்றி பெறுகின்றன. அந்த படங்கள் போல் தமிழ் படங்கள் வரவேண்டும் என்ற ஆசை ரசிகர்கள் மத்தியில் இருந்தது அதை நிறைவேற்றும் வகையில் தான் கங்குவா படம் அமைந்துள்ளது. 3D படமாக திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் திஷா பதனி , கருணாஸ் ,பாபி தியோல் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்து இருக்கிறார். கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படம் நடிகர் சூர்யா திரை வரலாற்றில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் ஆகும். நேற்று இந்த படம் வெளியானது இதற்கு கலவையான விமர்சனங்கள் வைத்துள்ளது.

மேலும் வசூலை பொறுத்த வகையில் தமிழகத்தில் மட்டும் கங்குவா 22 கோடி வசூல் செய்தது. திரைப்பட வெளியாகி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வரிசையில் விஜயின் தி கோட் படம் 39.15 கொடியை வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ரஜினியின் வேட்டையன் 27.75 கோடியை வசூல் செய்துள்ளது.

மூன்றாம் இடத்தில் சூர்யாவின் கங்குவா 22 கோடி வசூல் செய்து உள்ளது. 4வது இடத்தில் சிவகார்த்திகேயன் அமரன் 16.05 கோடி வசூலித்துள்ளது.
இந்தியன் 16.5கொடியை வசூல் செய்து உள்ளது.தங்கலான் 12.4 கோடி வசூல் செய்தது இருக்கிறது. தீபாவளி அன்று ரிலீஸ் ஆன அமரன் திரைப்படத்தின்  ஒரு நாள் வசூல் சாதனையை முறியடித்து முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் மூன்றாம் இடத்தில் சூர்யாவின் கங்குவா படம் இருக்கிறது.