சூர்யாவின் அடுத்தடுத்த 4 தரமான இயக்குனர்களுடனான பயணம்! அடுத்த ஆஸ்கருக்கு திட்டமா?

Photo of author

By Sakthi

ஜெய்பீம் திரைப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா தற்சமயம் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கின்ற இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா, அருள்மோகன், சத்யராஜ், வினை பல நட்சத்திரங்கள் நடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

மிக விரைவில் வெளியாக இருக்கும் இங்கு திரைப்படத்திற்குப் பின்னர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக பல திரைப்படங்கள் வரிசை கட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யா இயக்குனர் பாலாவுடன் மறுபடியும் ஒரு திரைப்படத்தில் இணைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இதனை தவிர்த்து அவர் வெற்றிமாறனுடன் இணையும் வாடி வாசல் என்ற திரைப்படமும் வரிசையில் இருக்கிறது, இதற்காக அவர் கேரளாவின் பிரபல களரி வித்தையை பற்றி பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து சூர்யா தற்சமயம் மேலும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

அண்ணாத்த திரைப்படத்திற்குப் பின்னர் சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார், அத்தோடு இறுதிச்சுற்று, சூரரைப்போற்று, கதைகள் உள்ளிட்ட படைப்புகளை இயக்கிய சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார்
.

இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அவர்கள் மறுபடியும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைய இருப்பது அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

இதன் காரணமாக, சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை அடுத்து இந்த 4 திரைப்படங்களில் நடிக்க உள்ளார். இந்த தகவல் எல்லாம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டவையாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த வருடத்தில் அடுத்தடுத்து சூர்யா முன்னணி இயக்குனர்கள் உடைய திரைப்படத்தில் இணைய உள்ளதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஒரே சமயத்தில் இத்தனை திரைப்படம் நடிக்கும் சூர்யாவை கண்டு தற்சமயம் திரையுலகமே ஆச்சரியத்தில் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.