1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பு; நடிகரின் ட்வீட்டை பங்கம் செய்த ரசிகர்கள்!

0
174

கொரோனா ஊரடங்கு காரணத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் வழக்கத்தை விட கூடுதலான மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் முதம் மின் கட்டணம் அதிகம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஊரடங்கினால் 18 – 20 மணி நேரம் வீட்டிலேயே இருப்பதால் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே மின் கட்டணமும் கூடுதலாக உள்ளது என்று, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் நடிகர் ஒருவர் மின் கட்டணம் குறித்து பதிவிட்ட ட்விட் வைரலாகி வருகிறது. நடிகர் அர்ஷாத் வர்ஷி தனது ட்விட்டரில், எனது வங்கி கணக்கில் இருந்து 1.03 லட்சம் மின் கட்டணமாக எடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு ட்விட்டில், அடுத்த முறை மின் கட்டணம் செலுத்த என் சிறுநீரகத்தை விற்க வேண்டும் என கூறிய அவர், தனது ஓவியத்தை வாங்கிக் கொள்ளுங்கள் மக்களே என்று கூறியுள்ளார்.

இதைப்பார்த்த இணைய ரசிகர்கள் உங்கள் ஓவியத்தை நாங்கள் வாங்க வேண்டும் என்றால் எங்கள் சிறுநீரகத்தை நாங்கள் விற்க வேண்டும் என்று பங்கமாக கலாய்த்துள்ளனர். இதற்கு முன்பு கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக நடிகை டாப்சி, நேகா தூபியா ஆகியோரும் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Previous articleசி.பி.எஸ்.இ 9-12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு! சி.பி.எஸ்.இ அறிவிப்பு
Next articleஜூலை 13 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு