நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்த போட்டோ இணையத்தில் வைரல்!! ரசிகர்கள் உற்சாகம்!…

0
138
Actor Vijay and Suriya's photo together has gone viral on the internet!! Fans are excited!
Actor Vijay and Suriya's photo together has gone viral on the internet!! Fans are excited!

நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்த போட்டோ இணையத்தில் வைரல்!! ரசிகர்கள் உற்சாகம்!…

தமிழ் திரைவுலகில்  முன்னணி ஹீரோக்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா அவர்கள். இதில் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அதே போல் சூர்யாவின் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து விஜய் சூர்யா இருவரும் இணைந்து முதன் முறையாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர் இதில் நடிகர் சூர்யா முதன் முதலில் அறிமுகமான திரைப்படமாகும். இப்படத்தை தொடர்ந்து இருவரும் இணைந்து சித்திக் இயக்கத்தில் வெளிவந்த ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இப்படத்தில் முழுவதும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக படம் முழுக்க நடித்திருப்பார்கள். இதில் நகைச்சுவை நடிகராக வடிவேலு களமிறங்கினார். இப்படை ஷூட்டிங்கில் விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்தே  இருப்பார்களாம். இப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது தந்தது.

இதன் பின்னர் நடிகர் சூர்யா மற்றும் விஜய் அவர்கள் இணைந்து நடிக்காமல் இருக்கும் நிலையில் தற்போது வெளிவரும் படங்களில் நடிப்பார்கள் என சில தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விஜய் சூர்யா இருவரும் இணைந்து சூர்யாவின் தந்தையான சிவக்குமார்  மடியில் அமர்ந்து உட்கார்ந்திருந்த புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.மேலும், விஜய் மற்றும் சூர்யா நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.

author avatar
Parthipan K