அரசியலுக்கு வந்தால் சிமாவில் இனிமேல் நடிக்கமாட்டேன்! நடிகர் விஜய் அறிவிப்பு..?
அரசியலுக்கு வந்துவிட்டால் இனி சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என்று நடிகர் விஜய் அவர்கள் இன்று கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இன்று பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேசியபோது நடிகர் விஜய் இதை கூறியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் அவர்கள் சமீபத்தில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த 234 தொகுதிகளிலும் உள்ள மாணவர்களுக்கு விருதும் ஊக்கத்தொகையும் நடிகர் விஜய் அவர்கள் வழங்கினார். நடிகர் விஜய் அவர்களின் இந்த சொயல் இவர் அரசியலுக்கு வரப்போவதாக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் தோன்றியது.
மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்து விட்ட பிறகு இரண்டு ஆண்டுகள் ஓய்வு எடுக்கப்போகறார் என்றும் 2026ம் ஆண்டுக்கான தேர்தலுக்கான வேலைகளை பார்க்கப் போவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் பனையூர் இல்லத்தில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.
லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்கள் அவருடைய அனைத்து காட்சிகளையும் நடித்து கொடுத்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதையடுத்து இன்று அதாவது ஜூலை 11ம் தேதி பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி இன்று நடிகர் விஜய் அவர்களின் தலைமையில் பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.
இதற்கு மத்தியில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில் நிர்வாகிகள் “அரசியலுக்கு தான் வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் அரசியலில் முழுகவனம் செலுத்தவுள்ளேன் என்று நடிகர் விஜய் அவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கூறினார். நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து வேலைகளையும் கட்டமைப்புகளையும் நாங்கள் செய்துவிட்டோம். நடிகர் விஜய் அவர்கள் கை காட்டினால் அவரோடு சேர்ந்து அரசியலில் ஈடுபடுவோம். மேலும் அவரோடு சேர்ந்து அரசியலில் தொடர்ந்து பயணிப்போம்” என்று கூறினர்.