ஷாருக்கான்வுடன்  இணைந்த நடிகர் விஜய்! அட்லீ இயக்கத்தில் புதிய படம்!

Photo of author

By Parthipan K

ஷாருக்கான்வுடன்  இணைந்த நடிகர் விஜய்! அட்லீ இயக்கத்தில் புதிய படம்!

Parthipan K

Actor Vijay joined with Shah Rukh Khan! New film directed by Atlee!

ஷாருக்கான்வுடன்  இணைந்த நடிகர் விஜய்! அட்லீ இயக்கத்தில் புதிய படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. இவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.அந்த வரிசையில் தற்போது அட்லீ இயக்கி வரும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஐவான் என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படத்தில் ஷாருக்கான்வுடன் இணைந்து பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அண்மையில் இயக்குனர் அட்லீயின் பிறந்தநாள் விழா ஐவான் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது.அந்த பார்டியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார்.இது ரசிகர்களுக்கு மிக சர்ப்ரைஸாக இருந்தது.

மேலும் ஐவான் திரைப்படம் ஷாருகான் தயாரிப்பில் உருவாகி வருவதால் இந்த படத்தில் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என ஷாருகான் நினைத்துள்ளார்.இதனையடுத்து பிறந்தநாள் விழாவில் விஜய்யை ஷாருகான் படத்தில் நடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.அதனை நடிகர் விஜய்  ஏற்றுக்கொண்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு விஜய் ஒரு வாரத்திற்கு  கால்ஷீட்  கொடுத்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. விஜய்யின் வசதிக்ககா இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் எனவும் தகவல் கசிந்துள்ளது.