நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு சினிமா படப்பிடிப்பில் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்தில் நடிக்கும்போதே அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதன்பின் அந்த படத்தை முடித்துவிட்டு ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுதான் அவரின் கடைசிப்படம் எனவும் சொல்லப்பட்டது. இந்த படத்தை முடித்தபின் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் பேசினார்கள்.
இடையில் விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று அவரின் நிர்வாகிகள் முன்பு திமுகவை திட்டி பேசினார். திமுக ஆட்சியை மன்னராட்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய். இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்த விஜயை திட்ட துவங்கிவிட்டார்கள். விஜய் வீட்டிலிருந்தே அரசியல் செய்து வருகிறார். பனையூர் அரசியல்வாதி.. திமுகவை வாரிசு அரசியல் என விமர்சிக்கும் விஜய் சினிமா வாரிசு இல்லையா?.. அவரின் அப்பா எஸ்.ஏ.சி மூலம் சினிமாவுக்கு வந்தவர்தானே விஜய் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

விஜய் வொர்க் ஃபிரம் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து கமெண்ட் அடித்து வந்தார். விஜய் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக எல்லோராலும் வைக்கப்படுகிறது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு மசோதாவுக்கு எதிராக இன்று தமிழகமெங்கும் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
தவெகெ சார்பில் பனையூரில் நடந்த போராட்டட்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கலந்துகொண்டார். ஆனால், விஜய் இதில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் விஜய்க்கு இன்று ஷூட்டிங் எதுவுமில்லை. அவர் வீட்டில்தான் இருந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். அதேநேரம், ஜனநாயகன் ஷூட்டிங் முடிந்தவுடன் விஜய் ஊர் உராக சுற்றுப்பயணம் செய்து விஜய் மக்களை சந்திப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.