முழு வில்லனாக மாறும் நடிகர் விஜய் சேதுபதி!! பிரபல ஹீரோவுக்கு இவர்தான் வில்லன்!!

Photo of author

By Parthipan K

முழு வில்லனாக மாறும் நடிகர் விஜய் சேதுபதி!! பிரபல ஹீரோவுக்கு இவர்தான் வில்லன்!!

 நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும்.

ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி இப்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார். மேலும் இவர் தற்பொழுது தனது ரசிகர்களை சந்தித்து அவர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக பல முயற்சிகளை செய்து வருகின்றார்.

அந்த வகையில் அவர் தன் ரசிகர்களிடம் மிகவும் அன்பாகவும் ,கனிவாகவும் நடந்து கொள்ளவார்.அதற்கு உதாரணமாக சமூகவலைத்தளத்தில் வெளியான பல வீடியோக்களை பார்க்கலாம்.

இவ்வாறு நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வருகின்ற விஜய் சேதுபதி தற்பொழுது வில்லன் ரோலில் கலக்கி கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் இப்பொழுது நடிகர் கார்த்தி நடிக்கின்ற படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. நடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சர்தார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது.அந்த வகையில் இந்த படத்தின் வசூல்  மட்டும் சுமார் 80 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வினியோகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிக அளவில் வசூலை குவித்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.சர்தார் படம் பாகம் 2 வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று ரசிகர்களும் விரும்புவதால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த படத்தை எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது.

சர்தார் படத்தின் 2 பாகத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

நடிகர் கார்த்தி தற்பொழுது ஜப்பான் படத்தில் நடித்து கொண்டு வருகின்றார்.மேலும் சர்தார் படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கூறியுள்ளது.